செவ்வாய், 19 மார்ச், 2013

இவை கவிதைகள் அல்ல ஆனால் கவிதை மாதிரி :)

மீண்டும் 

விரைந்தோடும் வாகனத்தோடு
பின்னோடும் மரங்களூடு
மீண்டும் ஊருக்கே ஓடிப்போய்  விடுகிறது 
மனம்...

*********************************************************************************

தவிப்பு 

தாழிட்ட  எண்ணங்களை  எல்லாம்
தாளில் இடும் நாள் நோக்கி
தவித்திருக்கும்
மனது

*********************************************************************************

இசை 

இலைகளின் வழி வழிந்தோடும்
முன்காலை வெண்பனியாய்     
உன்
இசையின் வழி கரைந்தோடுகிறது
என் மனது.....

*********************************************************************************

சொல் எனும்  முத்து 

முகிழ்ந்தெழும் வார்த்தைகளுக்குள்
மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்
இன்னும்
முத்தெடுத்தபாடில்லை நான்...

*********************************************************************************

இன்னும்...

எழுதாக் கவிதை
வரையா ஓவியம்
சொல்லா சொற்கள்
உதிராக் கண்ணீர்
வெடித்தெழாக் கோபம்
இன்னும் உண்டு என்னிடத்தே...

*********************************************************************************

நினைவில் காடுள்ள மிருகத்தை பழக்க முடியாதாம்...
நானும் அப்படித்தானோ?????????????

4 கருத்துகள்:

  1. வணக்கம் தோழி நலமா?,கவிதைதான் இவை ஏன் சந்தேகம்??? முதல்க்கவிதையிலேயே மனம் ஊருக்கு ஓடிவிடுகின்ற்து அதுவும் ஊர்ப்ப்ற்று அதிக்ம் தான் ப்ச்சையானா அந்த் ம்லைமுக்ட்டை மீண்டும் பார்க்க தூண்டுகின்றது உங்களின் கவிதையும் அதுக்கான காட்சிப்படமும்.

    பதிலளிநீக்கு
  2. இசையின் கவிதை நல்ல படிமானம் வாழ்த்துக்கள்§ தொடர்ந்து வலைப்பக்கமும் பதிவை இட்டு வாசகர்களை மறக்காமல் இருங்க தோழி!ஹீஈஈஈஈஈஈஈஈ

    பதிலளிநீக்கு
  3. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_7492.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நன்றி திரு தனபாலன் அவர்களே... நன்றி நண்பர் தனிமரம் நேசன் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு...

    பதிலளிநீக்கு