புதன், 13 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல்..... # 1

பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று . நண்பர் தனிமரம் நேசன் அடிக்கடி பாடல் பதிவுகள் போட்டு கொசுவர்த்தி சுத்தற வைப்பதால் நானும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி கொஞ்சம் எழுதலாமே என்று தொடங்கி இருக்கிறேன்....(எழுத விஷயம் கிடைச்சிருச்சு ... அத சொல்லாம..... சும்மா )

அமிர்தன் பிறக்க இருந்த நேரத்தில் என்னவர் நிறைய கர்நாடக இசை பாடல்களை சேகரித்து எனக்கு தந்திருந்தார்... அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் MS சுப்புலட்சுமி அம்மா அவர்களின் "குறை ஒன்றும் இல்லை" பாடல்....
இது ஐ நா சபையில் பாடப்பட்ட பாடல்.... அது மட்டும் இல்லாமல் இந்த பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... கோவிலுக்கு போனாலும் "கடவுளே காப்பாற்று" என்பதை தவிர எதையுமே வேண்டத்  தோன்றுவதில்லை காரணம் ஆழ சிந்தித்துப்பார்த்தால் எதுவுமே குறை சொல்ல முடியாத வாழ்வை தான் இறைவன் தந்திருக்கிறான் அதை நிறைவாக வாழாதது நம் பிழையன்றி அவனது இல்லையே.... 

எனக்கு மட்டும் இல்லை அமிர்தனுக்கும் இந்த பாடல்  மிகவும் பிடிக்கும்... அவன் கருவில் இருக்கும் போதே நான் இந்தப்பாடலை அதிகம் கேட்டதாலோ என்னவோ குழந்தை பிறந்த பிறகும் சினுகும் நேரங்களில்  இந்த பாடலை கேட்டால்  அமைதியாகி விடுவான். அது இன்றும் தொடர்கிறது. 
தேன் குரலில் அம்மா பாடும் அந்த பாடல் இது...

இந்த பாடலின் அதே மெட்டையும்  கருத்தையும் சுமந்து வரும் இந்த பாடலும் எனக்கு விருப்பமான ஒன்று (அறை  எண் 305 இல் கடவுள் படத்தின் பாடல்)

இன்னும் என்னை கவர்ந்த பல பாடல்களோடு மீண்டும் வருகிறேன்....

11 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

    பதிலளிநீக்கு
  2. மூத்த பதிவாளினி இந்த தனிமரத்திற்கு இப்படி ஒரு உள்குத்து குத்துவதா ?
    உண்மையில் இனிய அர்த்த முள்ள கர்னாடக சங்கீதப் பாடல்கள் பல m.s அம்மாவின் குரலில் வந்திருக்கிறது இப்போது கர்னாடக சங்கீதம் மறந்து பலர்குத்துப் பாட்டில் கும்மியடிக்கும் போது உங்களின் ரசனை மிகவும் சிறப்புக்குரியதுடன் இன்னும் நீங்கள் கற்ற சங்கீதம் உயிர்ப்புடன் இருப்பது இதுவே சாட்சி.

    பதிலளிநீக்கு
  3.  m.s அம்மாவின் குரலிற்கு வாஜ்பாய் முதல் k.r.நாராயணன் வரை ரசிகர்கள் பலர் மேடையில் பாடுவதால் ஒலி/ஒளி கொஞ்சம் தெளிவின்மையாக இருக்கின்றது இதை ஒலிநாடாவில் கேட்கும் போது மிகவும் ஆலாபனை ரசிக்கக்கூடியது.
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா அனுபல்லவியில் மனசு மலையப்பா பின் போவதால் தான் நானும் அவரிடம் தரிசனம் பெற வருடத்தில் சிலநாட்கள் ஒடிப்போய்விடுகின்றேன். 
    பாடும் குரலில் பலமயக்கம் இருப்பது பஜனைகளில் கலந்து கொள்ளும் போது சில நேரங்களில் இன்னும் கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடியது.

    பதிலளிநீக்கு
  4.  m.s அம்மாவின் குரலிற்கு வாஜ்பாய் முதல் k.r.நாராயணன் வரை ரசிகர்கள் பலர் மேடையில் பாடுவதால் ஒலி/ஒளி கொஞ்சம் தெளிவின்மையாக இருக்கின்றது இதை ஒலிநாடாவில் கேட்கும் போது மிகவும் ஆலாபனை ரசிக்கக்கூடியது.
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா அனுபல்லவியில் மனசு மலையப்பா பின் போவதால் தான் நானும் அவரிடம் தரிசனம் பெற வருடத்தில் சிலநாட்கள் ஒடிப்போய்விடுகின்றேன். 
    பாடும் குரலில் பலமயக்கம் இருப்பது பஜனைகளில் கலந்து கொள்ளும் போது சில நேரங்களில் இன்னும் கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடியது.

    பதிலளிநீக்கு
  5. சிறிரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாள் மீது அதிகாலையில் பஜனையில் இதைப் பாடும் போது கேட்கும் சுகம்  எத்தனை முறை கேட்டாலும் பெருமாளை சேவிக்க ஆயுள் போதாது என என்ன வைக்கும் பாடல் இது. கடவுள் என்னை அங்கு பலமுறை இதைப் பார்க்க வைத்ததுடன் பலகோயில் களில் இந்த மாதிரி பஜனைகளை அனுபவிக்க கேட்க வைத்திருப்பதில் எனக்கும் குறையொன்றும் இல்லை மலையப்பா என என்னிக்கொள்வேன் !

    பதிலளிநீக்கு
  6. ஆன்மீகத்தில் பலநல்ல கருத்தாளம்மிக்க பாடல்கள் பலரிடம் போய்ச்சேரவில்லை அதற்கு நம்நாட்டில் சங்கீதம் ஒரு சிலரிடம் மட்டும் மாட்டிக் கொண்டு இலங்கை அரசியல் போல் முழிக்கிறது தோழி! தமிழகத்தில்  பெருமாள் , முருகன் கோயில்களில்அதிகாலையில் தயிர்சாதம் மாமிக்களும் அவர்கள் பின் வரும் குயில்களும் பாடும் போது கேட்டாள் எங்களின் ரசனை எவ்வளவு கீழ் இருக்கு என்று உணர்ந்து கொள்ள முடியும்.

    பதிலளிநீக்கு
  7. என்னிடம் சில நல்ல பெருமாள்,பாடல்கள் இருக்கிறது இதை ரசிப்பார்களா என்ற தவிப்பில் பதிவு செய்ய வில்லை இனி நீங்கள் வழிகாட்டி விட்டீர்கள் நேரம் வரும் போது கும்மியடிக்கின்றேன்.
    அடிக்கடி பதிவு போடுங்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  8. இட்ண்லியில் உங்கள் இனைப்பு சரியாக வேலை செய்யவில்லை சற்று அவதானியுங்கள் தோழி இன்னும் பலபாடல்களுடன் வாருங்கள் நேரம் கிடைக்கும் போது.

    பதிலளிநீக்கு
  9. திரியை தூண்டியது நீங்கள் என்று சொன்னேன் நேசன் மற்றபடி உள்குத்தெல்லாம் இல்லை

    பதிலளிநீக்கு
  10. M S அம்மாவின் குரலுக்கு நான் என்றுமே ரசிகை.... இன்னும் பல பாடல்கள் இருக்கிறது சீக்கிரம் பதிவிடுகிறேன். உங்களிடமிருந்தும் எதிர்பார்கிறேன்.
    இந்த இன்ட்லி பெரிய பிரச்சினை தான் பார்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நேசன்.

    பதிலளிநீக்கு